ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் |

நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து ஜூன் 14ஆம் தேதி வெளியான படம் மகாராஜா. அவரது ஐம்பதாவது படமான இப்படம் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ள நிலையில், வருகிற ஜூலை 12ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நெட் பிளிக்ஸ் நிறுவனம், ‛லட்சுமி காணாமல் போனதும் மகாராஜாவோட வாழ்க்கை தலைகீழாய் ஆயிருச்சு. தன்னுடைய வீட்டுச் சாவியை திருப்பிக் கொண்டு வர மகாராஜா எவ்வளவு தூரம் போறாரு' - என்ற ஒரு கேப்ஷனையும் பதிவிட்டுள்ளது.