லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி |
'பீச்சாங்கை' கார்த்திக், மனிஷாஜித் மற்றும் பலர் நடிக்க உருவாகியுள்ள 'ஆர்யமாலா' என்ற படத்தின் இசை வெளியீடு இன்று மாலை நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் 'ஆர்யமாலா' என்னுடைய படம், தற்போது தயாரிப்பாளர், அவரையே இயக்குனர் என்று போட்டு படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளதாக வடலூர் ஆதிரை என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து பேஸ்புக்கில், “கடந்த 2017ல் "ஆண்டாள்"என்கிறப் பெயரில்... திரைப்பட நடிகர் "பீச்சாங்கை" கார்த்திக்,நடிகை மணிஷாஜித் ஆகியோரை நாயகன்,நாயகியாக கொண்டும்.... இயக்குனர் மாரிமுத்து, சிவசங்கர் மாஸ்டர், உஷா எலிசபெத், தவசி உள்ளிட்ட நடிகர், நடிகைகளை முக்கிய கதாபாத்திரங்களாகவும்… ஒளிப்திவாளர் ஜெய், இசையமைப்பாளர் செல்வநம்பி, படத்தொகுப்பாளர் "சகா" ஹரிஹரன், கலை இயக்குனர் சிவா, நடன இயக்குனர் தஸ்த்தா, சண்டை மிரட்டல் செல்வா-வீரா,தயாரிப்பு மேலாளர் ஹென்றிகுமார், மக்கள் தொடர்பு ஷேக் ஆகியோர் அடங்கிய படக்குழுவை வைத்து பெப்சி அமைப்பின் அனுமதியோடு தமிழ் திரைப்படத்தை இயக்கி முடித்தேன்.
அப்படம் தற்சமயம் "ஆர்யமாலா" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு தயாரிப்பாளரே இயக்குனர் எனும் பதிவோடு 08.07.2024 அன்று இசை மற்றும் டிரைலர் வெளியீடு நடைபெற உள்ளதாக அறிந்து வேதனை அடைந்தேன். ஊடக நண்பர்களும், பேஸ்புக் உறவுகளும், எழுத்தாளர்களும், கவிஞர்களும், சமூக செயற்பாட்டளர்களும் ஒரு படைப்பாளியாக எனது உரிமையை பாதுகாக்க துணை நிற்குமாறு அன்போடு வேண்டுகிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, இன்று மாலை நடைபெறுவதாக இருந்த 'ஆர்யமாலா' படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீட்டை படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளனர்.