ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் 'விடாமுயற்சி'. இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் ஆரம்பமானதிலிருந்து எந்தவிதமான போஸ்டர்களையும் வெளியிடாமல் இருந்தது படக்குழு.
அப்படத்திற்கு அடுத்து அஜித் நடிக்கும் 'குட் பேட் அக்லி' படத்தின் இரண்டு லுக்குகள் வெளியான பின்பு கூட எதையும் விடாமல் இருந்தார்கள். ரசிகர்கள் பலர் கேட்டதற்குப் பிறகு ஒரு வழியாக ஜுன் 30ம் தேதி திடீரென 'விடாமுயற்சி' படத்தின் முதல் லுக்கை வெளியிட்டார்கள். ஒரு நெடுஞ்சாலையில் கையில் ஒரு பேக்குடன் அஜித் நடந்து வருவது போன்ற முதல் லுக் வெளியானது. அதற்கு கடுமையான விமர்சனங்களும் எழுந்தது. அதை வைத்து பல மீம்ஸ்களும் வெளிவந்தன. இப்படியா முதல் போஸ்டரை வெளியிடுவது என்று அஜித் ரசிகர்களே நொந்து போனார்கள்.
இந்நிலையில் நேற்று திடீரென இரண்டாவது லுக்கை வெளியிடுகிறோம் என்று அறிவித்தார்கள். அது மட்டுமல்ல இரண்டு விதமான லுக்கையும் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்கள். ஒரு போஸ்டரில் அஜித் ஜீப் ஓட்டுவது போலவும், மற்றொரு போஸ்டரில் கையில் துப்பாக்கியுடன் நிற்பது போலவும் வெளியிட்டார்கள். முதல் லுக்கின் விமர்சனங்களை சமாளிக்கும் விதமாக இந்த இரண்டு இரண்டாவது போஸ்டர்களும் படம் ஆக்ஷன் படம்தான் என்பதை வெளிப்படுத்துவதாக இருந்தன.




