அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் சூர்யாவின் 44வது படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு அந்தமானில் நிறைவடைந்துள்ளது.
ஜுன் மாதம் முதல் வாரத்தில் அந்தமானில் ஆரம்பமான முதல் கட்டப் படப்பிடிப்பு ஜுலை முதல் வாரத்தில் முடிந்துள்ளது. மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜும் அந்தமான் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஜெயராம், கருணாகரன் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கு முன்பாக சிறிய வீடியோ முன்னோட்டம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்கள். கார்த்திக் சுப்பராஜ், சூர்யா முதல் முறை இணையும் படம் என்பதால் படம் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ல் படத்தின் முதல் பார்வை வெளியாகும் எனத் தெரிகிறது.