வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
இசையமைப்பாளர் அனிருத்தின் வருகைக்குப் பிறகு ரஜினிகாந்த், கமல், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் பெரும்பாலும் அனிருத் தான் இசையமைத்து வருகிறார். ஒரு பக்கம் அனிருத்தின் நண்பர்களாக நெல்சன், லோகேஷ் கனகராஜ் போன்றவர்கள் ரஜினி, விஜய் போன்றவர்களை இயக்கும்போது இயல்பாகவே அவர்கள் தங்களது படத்திற்கு அனிருத்தை டிக் செய்கின்றனர். அவரும் இவர்களது படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்து விடுகிறார்.
ஆனால் விஜய் படங்களில் தொடர்ந்து தவறாமல் பாடல் எழுதி வந்த பாடலாசிரியர் கபிலன் தெறி படத்திற்கு பிறகு அவருக்கு பாடல் எழுதவே இல்லை. குறிப்பாக அனிருத் தனக்கென ஒரு பாடலாசிரியர் குழுவை வைத்துக் கொண்டிருப்பதாலும் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் என்கிற பெயரில் வித்தியாசமான பாடல்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாலும் தனக்கு அனிருத்திடமிருந்து எந்த அழைப்பும் வருவதில்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் கபிலன்.
அதுமட்டுமல்ல விஜய்க்கு தான் எழுதிய பல படங்களில் அவரது ஓப்பனிங் பாடல்கள் மாஸாக இருப்பதுடன் அதில் பல சமூக கருத்துக்களை தொடர்ந்து சேர்த்து வந்தேன். எப்படி எம்ஜிஆருக்கு அவரது சமூக மற்றும் தத்துவ பாடல்கள் அவர் அரசியலில் நுழைந்தபோது உதவியதோ அதேபோல தற்போது அரசியலில் அடி எடுத்து வைத்துள்ள விஜய்க்கு அதுபோன்ற பாடல்கள் ரொம்பவே உதவிகரமாக இருக்கும்
ஆனால் அனிருத் விஜய் படங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்த பின் ஓப்பனிங் பாடல்களை ஹிட்டாக கொடுக்க வேண்டும் என்று நினைத்தாரே தவிர இதுபோன்ற சமூக கருத்துக்கள் கொண்ட பாடல்களை விஜய்க்கு அவர் கொடுக்கவில்லை. அப்படி அவர் கொடுத்திருந்தால் விஜய்யின் அரசியல் நுழைவுக்கு இன்னும் அது உதவியாக இருந்திருக்கும். அந்த வகையில் விஜய்க்கு அப்படிப்பட்ட பாடல்கள் சமீப வருடங்களில் கிடைக்காமல் போனதில் எனக்கு வருத்தமே” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் கபிலன்.