என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

கடந்த 20 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. இவரது சினிமா கேரியரில் சாமி, கில்லி, விண்ணைத்தாண்டி வருவாயா, 96, பொன்னியின் செல்வன் போன்ற பல படங்கள் முக்கிய படங்களாக அமைந்தன. தற்போது கமலுடன் தக்லைப்,  அஜித்துடன் விடாமுயற்சி போன்ற படங்களில் நடித்து வருகிறார்  த்ரிஷா. 
சமீபத்தில் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இவர் வெளியிட்ட போட்டோ சோசியல் மீடியாவில் பலதரப்பட்ட வதந்திகளுக்கு வழி வகுத்தது. குறிப்பாக பாடகி சுசித்ரா இவர்களை குறிப்பிட்டு பேசிய வீடியோ சர்ச்சையை மேலும் அதிகமாக்கியது. இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் மறைமுகமாக இதற்கு பதில் தரும் விதமாக, ‛‛அடுத்தவர்களின் கருத்துக்களை தூக்கி சுமக்காதீர்கள்'' என்று ஒரு பதிவு போட்டு வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்  த்ரிஷா.
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            