வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி தற்போது திரைக்கு வந்துள்ள படம் ‛கல்கி 2898 ஏடி'. இந்த படத்தின் சிறப்பு காட்சியை பார்த்துவிட்டு மீடியாக்களை சந்தித்தார் கமல்ஹாசன்.
அப்போது அவர் கூறுகையில், ‛‛இந்த படத்தை ஒரு ரசிகராக பார்த்து பிரமித்து போனேன். உலக என்டர்டெயின்மென்ட் என்பதை நோக்கி இந்திய சினிமா நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளங்களில் இந்த படமும் ஒன்று. இது போன்ற படங்களில் நான் அதிகமாக நடித்ததில்லை. என்றாலும் ஒரு சுவாரஸ்யமான கதையில் நடித்தது மகிழ்ச்சி. இந்த படத்தை மிகவும் பொறுமையுடன் ஜனரஞ்சகமாக செதுக்கி எடுத்திருக்கிறார் இயக்குனர் நாக் அஸ்வின்.
இந்தப் படம் குறித்து உலகெங்கிலும் இருந்து நல்ல செய்திகளாக வந்து கொண்டிருக்கிறது. இது இந்திய திரைப்படங்களுக்கு வலு சேர்க்கும் ஒரு படமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்,'' என்றார்.
மேலும் அவர் கூறியதாவது: மக்களுக்கு புரியாது மக்களுக்கு தெரியாது என்று சொல்வதையெல்லாம் நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன். வித்தியாசமான புதுமையான படங்களாக இருந்தால் மக்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பார்கள். அப்படித்தான் ஜேம்ஸ் பாண்ட் படங்களை பார்த்தார்கள். பாஷை புரியாமல் இருந்தால் கூட நல்ல படைப்புகளாக இருந்தால் மக்கள் ரசிப்பார்கள்.
நான் சிறுவனாக இருந்தபோது செம்மீன் என்ற ஒரு படம் வந்தது. மொழிமாற்றம் கூட தமிழில் செய்யப்படவில்லை. அந்த படத்தை நான் இரண்டு முறை பார்த்தேன். எதுக்காக பார்த்தேன் என்று கேட்டால் சொல்லத் தெரியாது. ஆனால் எல்லோருமே அந்த படத்தை விரும்பி பார்த்தார்கள். அது கூட அந்த சமயத்தில் 100 நாள் ஓடியது.
அதே போன்று நல்ல படைப்புகளாக இருந்தால் மொழிமாற்றமே செய்யப்படவில்லை என்றாலும் மக்கள் அதை ரசிப்பார்கள். அதேபோன்றுதான் மரோ சரித்ரா என்ற படம் டப்பிங் செய்யாமல் தெலுங்கு படமாகவே தமிழகத்தில் ஓடி வெற்றி பெற்றது. நாம் தான் கலைக்கு மொழியை திணிக்கிறோம். சினிமா என்பது ஒரு தனி மொழி. அதற்கான உதாரணம் இந்த கல்கி 2898 ஏடி படத்தில் தெரிகிறது. கலை என்ற மொழி தன்னுடைய பலத்தை இன்னும் அதிகப்படுத்தி கொண்டே வருகிறது என்கிறார் கமல்ஹாசன்.