Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கல்கி 2898 ஏடி படத்திற்காக ஐந்து மொழிகளில் டப்பிங் பேசிய கமல்ஹாசன்

23 ஜூன், 2024 - 12:35 IST
எழுத்தின் அளவு:
Kamal-Haasan-dubbed-in-five-languages-​​for-Kalki-2898-AD

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் கல்கி 2898 ஏடி. வருகிற 27ம் தேதி திரைக்கு வரும் இப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்கள் எல்லாம் தங்களது தாய் மொழியில் மட்டுமே டப்பிங் பேசியுள்ள நிலையில் வில்லனாக நடித்திருக்கும் கமல்ஹாசன் மட்டும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் தனக்குத்தானே டப்பிங் பேசி இருக்கிறார்.

மேலும் சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில், கமல் நடித்த ஒரு காட்சியும் இடம் பெற்றிருந்தது. அதில், எத்தனை யுகம் ஆனாலும் எத்தனை வாய்ப்பு கொடுத்தாலும், மனுஷன் மாறல, மாறத் தெரியாது என்ற வசனத்தை கமலஹாசன் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
டி.இமான் இசையில் பாடிய பாடகி சைந்தவி!டி.இமான் இசையில் பாடிய பாடகி சைந்தவி! கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்துள்ள மாற்றம்! கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)