Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் 69 - தெலுங்கு தயாரிப்பாளர் தான் என்பது உறுதி

22 ஜூன், 2024 - 12:44 IST
எழுத்தின் அளவு:
Vijay-69---Telugu-producer-for-sure

விஜய்யின் 68வது படமாக 'தி கோட்' படம் உருவாகி வருகிறது. இப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை அடுத்து தனது 69வது படத்துடன் சினிமாவில் நடிப்பதைவிட்டு விலகி அரசியலில் ஈடுபட உள்ளார் விஜய்.

விஜய்யின் 69வது படம் குறித்து இதுவரையிலும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், யூகங்களாய் பல செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படத்தைத் தயாரித்த நிறுவனமான டிவிவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம்தான் அந்தப் படத்தைத் தயாரிக்கப் போகிறது என்று செய்திகள் வந்தன.

ஆனால், விஜய் கேட்ட அதிகப்படியான சம்பளத்தை ஏற்காமல் அந்நிறுவனம் விலகியதாக பின்னர் சொன்னார்கள். 69வது படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இன்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு டிவிவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், “எங்களது அன்புக்குரிய தளபதி விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் வெற்றியின் மூலம் பாக்ஸ் ஆபீசைத் தீப்பற்ற வையுங்கள். உங்கள் இருப்புடன் சிரிப்போடு இருங்கள்,” என்று வாழ்த்தியிருக்கிறது.

இதன் மூலம் விஜய்யின் 69வது படத்தைத் தயாரிக்கப் போவது அவர்கள்தான் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆஷிகாவை பெண்களே காதலிப்பார்கள் : இயக்குனர் கணிப்புஆஷிகாவை பெண்களே காதலிப்பார்கள் : ... நடிகர் விஜய் பிறந்தநாள் விழாவில் அலட்சியம் : சாகசம் என்ற பெயரில் சிறுவன் கையில் தீ பற்றியதால் அதிர்ச்சி நடிகர் விஜய் பிறந்தநாள் விழாவில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in