லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
'அனே பாடகி' படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா. 'ரதாவரா' படத்தின் மூலம் புகழ்பெற்றார். இதை தொடர்ந்து அவர் பாலிவுட்டிலும் அறிமுகமானார். கிஷோர் நடித்த 'ரெட் காலர்' எனும் படத்தையும் இயக்கியுள்ளார். தற்போது அவர் இயக்கும் படம் செளகிதார். இதில் 'தியா' படத்தின் மூலம் புகழ்பெற்ற பிருத்வி அம்பர் 'சௌகிதார்' வேடத்தில் நடிக்கிறார். கன்னடம் மற்றும் தமிழில் தயாராகும் இந்த படம் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் வெளியாகிறது.
படம் குறித்து இயக்குனர் சந்திரசேகர் பாண்டியப்பா கூறும்போது, “தலைப்பை வைத்து இந்த திரைப்படம் மாஸான படம் என நினைத்து விடாதீர்கள். உண்மையில் இது ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். எல்லா மொழி மக்களுக்கும் பொருந்துகிற கதை அம்சத்துடன் உருவாகிறது” என்றார்.
இந்த படத்தை வித்யா சேகர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கல்லஹள்ளி சந்திரசேகர் தயாரிக்கிறார். சச்சின் பஸ்ரூர் இசையமைக்கிறார்.