ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அப்படத்தில் இணையும் நடிகர்கள் பற்றிய அறிவிப்புகளும் வந்தன.
இந்நிலையில் இப்படத்திற்கு ஏஆர் முருகதாஸ் 'சிங்கநடை' என்ற பெயரைத் தேர்வு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அதுதான் படத்தின் பெயரா என்பது அறிவிப்பு வந்த பிறகே தெரியும்.
'சிங்கநடை' என்ற பெயரில் சிரஞ்சீவி, சாக்ஷி, ரம்யா கிருஷ்ணன் நடித்த தெலுங்கு டப்பிங் படம் ஒன்று 1999ம் ஆண்டு வெளியாகி உள்ளது. பொதுவாக டப்பிங் படங்களின் பெயர்களை நேரடி தமிழ்ப் படங்களுக்கு யாரும் வைக்க மாட்டார்கள்.
ஒருவேளை இந்த செய்தியின் மூலம் ஏஆர் முருகதாஸிற்கு தெரிய வந்தால் அவர் படத்தின் பெயரை மாற்றவும் வாய்ப்புள்ளது.