ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
கன்னிமாடம் படத்தை அடுத்து நடிகர் போஸ் வெங்கட் இயக்கி உள்ள படம் சார். விமல், சாயா தேவி இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தில் சரவணன், ரமா, ஜெயபாலன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். சித்து குமார் இசையமைத்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி இருக்கிறது.
சார் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. கிராமத்து கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் விமல், சாயாதேவி ஆகிய இருவரும் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றுகிறார்கள். அப்போது அங்குள்ள பெரியவர்கள் சாமி பெயரை பயன்படுத்தி பள்ளிக்கூடத்தை மூட முயற்சி செய்கிறார்கள். இதையடுத்து அவர்களுடன் போராடி எப்படி அந்த பள்ளியை மீட்டு எடுக்கிறார்கள் என்பது தான் இந்த படத்தின் கதையாகும்.
சாமி, கடவுள் பெயரில் மூடநம்பிக்கைகளை கொண்ட ஒரு கிராமத்தில் உள்ளவர்கள் அங்குள்ள சிறுவர்களை படிக்க விடாமல் செய்யும் கிராமத்து மனிதர்களின் பின்னணியை வெளிச்சம் போடும் கதையில் இந்த படம் உருவாகி இருப்பது இந்த டீசரில் தெரிகிறது.