ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சில தினங்களுக்கு முன்பு நடிகை நிவேதா பெத்துராஜ் காரில் சென்றபோது, அதை வழிமறித்த காவல் துறை அதிகாரிகள், காரை சோதனை செய்ய வேண்டும் என்று கூறியபோது அதற்கு எதிராக நிவேதா பெத்துராஜ், அவர்களிடத்தில் வாக்குவாதம் செய்தார். அப்போது அதை செல்போனில் வீடியோ எடுத்தவர் மீதும் அடிக்க பாய்ந்தார் நிவேதா பெத்துராஜ். இப்படியொரு வீடியோ சோசியல் மீடியாவில் வெளியானபோது, இந்த வீடியோ உண்மையா? இல்லை ஏதேனும் திரைப்படத்தில் உள்ள காட்சியா? என சந்தேகங்கள் எழுந்து வந்தது.
இந்நிலையில் தற்போது அது ஒரு பிரமோஷன் வீடியோ என்பது தெரிய வந்துள்ளது. தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் பருவு என்று வெப் தொடரில் தற்போது நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அதில் இடம் பெறும் ஒரு காட்சியில் கார் டிக்கியில் ஒரு பிணத்தை அவர் கொண்டு செல்லும் போது தான் காவல்துறை அதிகாரிகள் அவரிடத்தில் விசாரணை நடத்துகிறார்கள். இது குறித்த வீடியோவை தற்போது ஜி5 தங்களது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த சஸ்பென்ஸை உடைத்துள்ளார்கள்.