Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'இந்தியன் 2' இசை விழாவில் ரஜினிகாந்த், ராம் சரண்?

23 மே, 2024 - 12:51 IST
எழுத்தின் அளவு:
Rajinikanth,-Ram-Charan-at-Indian-2-music-festival?


ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன் நடித்துள்ள 'இந்தியன் 2' படத்தின் இசை வெளியீட்டு விழா ஜுன் 1ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த இசை விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த், ராம் சரண் கலந்து கொள்ள உள்ளார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சிரஞ்சீவி கலந்து கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.

சில முக்கிய படங்களின் இசை வெளியீட்டிற்கு மட்டுமே ரஜினிகாந்த் வருவார். 'இந்தியன் 2' படத்தின் இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன், அனிருத் என அவருக்கு வேண்டப்பட்டவர்கள் இப்படத்தில் இணைந்திருப்பதால் நிச்சயம் கலந்து கொள்வார். மேலும், ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தை ஷங்கர் இயக்கி வருவதால் ராம் சரண் வர உள்ளார்.

தமிழ் சினிமா படங்களின் இசை வெளியீடுகளில் மற்ற மொழி நடிகர்கள் அதிகம் கலந்து கொள்ள மாட்டார்கள். இருந்தாலும் மகன் படத்தை இயக்குவதால் சிரஞ்சீவியும் வருவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அவரும் வந்தால் இந்த இசை விழா சிறப்பானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கு, தமிழில் அனிருத்தின் அடுத்தடுத்த அதிரடிதெலுங்கு, தமிழில் அனிருத்தின் ... எம்ஜிஆர் - சிவாஜிக்கே செட்டாகாத போது எனக்கு மட்டும் எப்படி? ராமராஜன் கேள்வி எம்ஜிஆர் - சிவாஜிக்கே செட்டாகாத போது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)