வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
2011ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் 'வெங்காயம்'. அந்தப் படத்தை இயக்கியவர் சங்ககிரி ராஜ்குமார். தற்போது தனி ஒருவராக ஒரு படத்தின் அனைத்து வேலைகளையும் செய்து 'ஒன்' என்ற படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இது கின்னஸ் சாதனையில் இடம்பெற இருக்கிறது. அடிப்படையில் ராஜ்குமாரின் குடும்பம் தெருக்கூத்து நடத்தும் குடும்பம். வெங்கயாம் படம் தெருக்கூத்து கலைஞர்களை பற்றி பேசியது. அதில் ராஜ்குமாரின் தந்தையே நடித்திருந்தார்.
இதன் அடிப்படையில் ராஜ்குமார் தற்போது உலகம் முழுக்க தெருக்கூத்து கலை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதாவது இங்கிருந்து தெருக்கூத்து கலைஞர்களை அழைத்து சென்று நடத்தினால் அதிக செலவாகும் என்பதால் ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று அங்குள்ள தமிழ் மக்களுக்கு தெருக்கூத்து கலையை கற்றுக் கொடுத்து அவர்களை கொண்டே இந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். தற்போது அமெரிக்காவின் சிகாகோ நகரில் தமிழ் அரசன் அதியமானின் கதையைத் தெருக்கூத்தாக அரங்கேற்றுகிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: தெருக்கூத்து குடும்பப் பின்னணியிலிருந்து வந்த நான் திரைத்துறையில் இயங்கிக் கொண்டிருந்தாலும், தெருக்கூத்து கலையை உலகெங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்து கொண்டே இருந்தது. கோவில் திருவிழாக்களில் மட்டும் நடத்தப்படுகிற கலையாக இல்லாமல் அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும்படி, தெருக்கூத்தின் இலக்கணம் சிறிதும் மாறாமல் அதன் வடிவத்தைச் சீர் செய்து உலகெங்கும் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டேன்.
முதன் முதலாகக் கம்போடிய அங்கோர்வாட் முன்பாக தொடங்கிய பயணம், இன்று ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கும் நீண்டிருக்கிறது. இன்னும் தெருக்கூத்தின் மீது மக்களின் அழுத்தமான பார்வையைக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினேன். அதன் பலனாக வருகிற 25ம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில், தமிழ்நாடு அறக்கட்டளையின் ஐம்பதாவது ஆண்டு பொன்விழாவைச் சிறப்பிக்கும் வகையில், உலக மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு பிரமாண்டத் தெருக்கூத்தை நடத்த உள்ளேன்.
அமெரிக்காவின் சிகாகோ ரோஸ்மான்ட் தியேட்டரில் 300 தெருக்கூத்து கலைஞர்களுடன் 4500 பார்வையாளர்களுடன் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதில் கடை ஏழு வள்ளல்களில் புகழ் பெற்ற அதியமானின் வரலாற்றுக் கதையைத் தெருக்கூத்து வடிவில் எழுதி நான் இயக்குகிறேன். திரைக் கலைஞர் நெப்போலியன் தலைமை தாங்குகிறார். தெருக்கூத்து கலை வரலாற்றில் புதியவர்களுக்குப் பயிற்சி அளித்து நிகழ்த்தப்படும் கலைகளில் இதுவே பிரமாண்டமான நிகழ்வு என்பதால் இது கின்னஸ் புத்தகத்தில் சாதனையாக இடம்பெறுகிறது. என்கிறார் ராஜ்குமார்.