கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் |

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி என்ற படத்திலும் தற்போது அவர் நடித்து வருகிறார். அஜித்குமார் மூன்று வேடங்களில் நடிக்கும் இந்த படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் இப்படம் 2025 பொங்கலுக்கு திரைக்கு வர இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.
இந்த நேரத்தில் விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அஜித் நடித்த வேதாளம் படத்தில் ஆலுமா டோலுமா என்ற ஒரு துள்ளலான பாடலை கொடுத்த அனிருத், விடாமுயற்சி படத்துக்காகவும் அதே பாணியில் ஒரு அதிரடியான பாடலை கம்போஸ் செய்துள்ளாராம். இந்த பாடல் விரைவில் விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிளாக வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளன. விடாமுயற்சி படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு ஜூன் மாதம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.