குட் பேட் அக்லி : ஓஜி சம்பவம் பாடல் வெளியானது | ஜனநாயகன் படம் குறித்து மமிதா பைஜூ கொடுத்த அப்டேட் | இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்தை ஹீரோவாக்கும் பிரபுதேவா | ஏஸ் படத்தின் உருகுது உருகுது... முதல் பாடல் வெளியானது | சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் |
தமிழ் சினிமாவில் பெயர் வாங்கிய தமிழ் கதாநாயகிகளை அதிகம் பார்க்க முடியாது. மற்ற மொழிகளில் இருந்து இங்கு நடிக்க வந்து பெயர் வாங்கியவர்கள்தான் அதிகம். குறிப்பாக மலையாளத்திலிருந்து வரும் நடிகைகள் என்றாலே நம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு பேரார்வம் வந்துவிடும். நீண்ட காலமாக மலையாளத்திலிருந்து வந்த நயன்தாராதான் தமிழில் நம்பர் 1 நடிகையாக இருந்து வருகிறார்.
அவரும் இப்போது சீனியர் நடிகையாகிவிட்டார். அதனால், அவருக்கான மவுசும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. எனவே, ரசிகர்கள் வேறு மலையாள நடிகைகள் பக்கம் தங்கள் பார்வைகளை செலுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களில் 'பிரேமலு' புகழ் மமிதா பைஜு, 'குருவாயூர் அம்பலநடையில்' புகழ் அனஸ்வரா ராஜன் ஆகியோர்தான் முன்னணியில் இருக்கிறார்கள்.
அனஸ்வரா ராஜன் 2022ல் வெளிவந்த 'ராங்கி' தமிழ்ப் படத்திலும் 2023ல் வெளிவந்த 'தக்ஸ்' என்ற படத்திலும் நடித்திருக்கிறார். அப்பேதெல்லாம் அவரை கண்டு கொள்ளாத ரசிகர்கள் இப்போது அனஸ்வராவை தங்களது ஆஸ்தான கதாநாயகியரில் ஒருவராகப் பார்க்கிறார்கள். அவர் சீக்கிரமே தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்று விருப்பப்படுகிறார்கள்.
'பிரேமலு' புகழ் மமிதா பைஜு, மார்ச் மாதம் வெளிவந்த 'ரெபல்' தமிழ்ப் படத்தில் நடித்திருக்கிறார். அடுத்து அவர் எப்போது தமிழ்ப் படத்தில் நடிக்கப் போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அதுவரையில் மமிதாவின் வீடியோக்கள் பலவற்றையும் வைரலாக்கி வருகிறார்கள்.
மமிதா, அனஸ்வரா இருவரில் யார் தமிழில் முன்னணி நடிகையாகப் போகிறார்கள் என்பது அடுத்து அவர்கள் நடிக்கப் போகும் படங்களின் மூலமே தெரிய வரும்.