இயக்குனர் லிங்குசாமிக்கு ஓராண்டு சிறை | ஜேசன் சஞ்சயின் ‛சிக்மா' படப்பிடிப்பு நிறைவு : டீசர் டிச., 23ல் வெளியீடு | அப்பா ஆகப் போகிறாரா நாகசைதன்யா? நாகார்ஜுனா கொடுத்த பதில் | பிரிவு பரபரப்புக்கு நடுவே செல்வராகவன் போட்ட பதிவு | ரீரிலீசில் ஒரு வாரத்தில் ரஜினியின் படையப்பா செய்த வசூல் எவ்வளவு? | 4 இடியட்ஸ் ஆக உருவாகும் 3 இடியட்ஸ் படத்தின் 2ம் பாகம் ? | 15 படங்களுக்குள் நுழைந்த 'ஹோம்பவுண்ட்', அடுத்த இறுதிச் சுற்றில் நுழையுமா ? | 'ஓஜி' இயக்குனருக்கு பவன் கல்யாண் கார் பரிசளித்தது ஏன்? | பெண் செய்யும்போது மட்டும் நிறைய எதிர்மறை விமர்சனங்கள் : நிகிலா விமல் | அதனால்தான் மம்முட்டி வித்தியாசமானவர் : துருவ் விக்ரம் பாராட்டு |

மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித்குமார் அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பில் வருகிற மே பத்தாம் தேதி முதல் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது மே பத்தாம் தேதி தொடங்கும் அப்படத்தின் படப்பிடிப்பில் அஜித் அல்லாமல் மற்ற நடிகர் நடிகைகள் சம்பந்தப்பட்ட காட்சிகளையே ஆதிக் ரவிச்சந்திரன் படமாக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு விரைவில் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கும் அஜித் குமார், அப்படத்தை முடித்துவிட்டு, ஜூன் மாதத்தில் இருந்து குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளாராம். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது.