லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினி, லால் சலாம் படத்தை அடுத்து தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் தற்போது இறங்கி இருக்கிறார். சமீபகாலமாக ஆன்மிக தலங்களுக்கு அடிக்கடி சென்று வரும் ஐஸ்வர்யா ரஜினி, வெறித்தனமான ஒர்க் அவுட்டிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறார். ஜிம்மில் தான் வொர்க் அவுட் செய்யும் பல வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா, தற்போது மீண்டும் தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், தனுஷ், ஐஸ்வர்யா ரஜினி இருவரும் விவாகரத்து சம்பந்தமாக குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், சமீபத்தில் அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.