ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் புஷ்பா. இதன் முதல் பாகம் புஷ்பா : தி ரைஸ் என்கிற பெயரில் வெளியானது. இரண்டாம் பாகம் தற்போது புஷ்பா : தி ரூல் என்கிற பெயரில் தயாராகி வருகிறது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதில் கதாநாயகியாக ஸ்ரீ வள்ளி என்கிற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.
முதல் பாகத்தில் அவர் சாமி சாமி என்கிற பாடலுக்கு ஆடிய நடனம் அவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு போய் சேர்த்தது. இந்த நிலையில் இந்த இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளது குறித்து சமீபத்தில் ராஷ்மிகா கூறும்போது, “முதல் பாகத்தில் நான் நடிக்கும்போது இதன் கதை, என் கதாபாத்திரம் குறித்த பெரிய புரிதல் இல்லாமல் தான் தயாரானேன். ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் ஸ்ரீ வள்ளி யார் என முழுமையாக புரிந்து கொண்டு நடித்து இருக்கிறேன். இந்த படம் வெளியாகும்போது இதில் என்னை ஸ்ரீவள்ளி 2.0 ஆக பார்க்கலாம்” என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.