ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
ஒரு காலத்தில் வெள்ளி விழா நாயகனாக இருந்தவர் மோகன். அதிகமான படங்களில் பாடகராக நடித்ததால் 'மைக் மோகன்' என்று செல்லமாக அழைக்கப்பட்டார். நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற அடம்பிடித்து பல ஆண்டுகள் நடிக்காமல் இருந்தவர் தற்போது 'ஹரா' என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
கோயம்புத்தூர் எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். விஜய்ஸ்ரீ ஜி இயக்கி உள்ளார். யோகி பாபு, சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ் மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரஷாந்த் அர்வின் இசை அமைத்துள்ளார், பிரகத் முனியசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் அறிமுக நிகழ்வில் மோகன் பேசியதாவது: நான் எத்தனையோ படம் நடித்திருக்கலாம், நான் நடித்த படங்கள் எல்லாம் லிஸ்ட் வைத்துக் கொண்டதே இல்லை. 'ஹரா' தான் என் முதல் படம். நான் நடிக்க ஆரம்பித்த போது, எனக்கு என மார்க்கெட் வந்த பிறகு, எப்போதும் என்னால் முடிந்த அளவு புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு தந்துள்ளேன். அவர்களுக்கு வாய்ப்பு தந்தால் பசியோடு வெறியோடு படம் செய்வார்கள் என்று தான் நினைத்துள்ளேன்.
என்னுடைய பாட்டுகள் பற்றி எல்லோரும் சொல்கிறார்கள் ஆனால் அதற்கு காரணம் இசைஞானி, அவர் யாருக்கும் வஞ்சனை இல்லாமல் பாட்டு தந்துள்ளார். எல்லா நடிகர்களுக்கும் ஒரே மாதிரி பாடல் தந்துள்ளார். ஆனால் அந்தப் பாடல்களில் என்னை ரசிக்கிறார்கள் என்றால் அதை ஆர் சுந்தர்ராஜன் மாதிரி இயக்குநர்கள் இயக்கியதுதான் காரணம். அவர்கள் மக்கள் உணர்ந்து ஃபீல் செய்வது மாதிரி படம் எடுத்து வெற்றிப்பெறச் செய்தார்கள். அதனால்தான் மக்கள் என்னை தங்கள் பிள்ளை போல் கொண்டாடினார்கள். என்னை வைத்து இயக்கிய இயக்குநர்கள், இசையமைப்பாளர் எல்லோரும்தான் என் வெற்றிக்கு காரணம்.
நான் எப்போதும் மார்க்கெட்டைப் பற்றி யோசிக்கவே மாட்டேன், ஒரு படம் என்றால் அது எனக்குப் பிடிக்க வேண்டும் அவ்வளவு தான். எனக்கு இந்த படத்தின் திரைக்கதையில் சில தயக்கங்கள் இருந்தது, அதை இயக்குனர் மனமுவந்து மாற்றினார். 7 முறை மாற்றி தான் இந்தப்படத்தை எடுத்துள்ளோம். இந்தப்படத்தில் முதலில் பாடல்கள் இல்லை, ஆனால் மூன்று பாடல்களை இயக்குனர் வைத்துவிட்டார், மூன்று பாடல்களையும் அவரே எழுதியுள்ளார்.
இவ்வாறு மோகன் பேசினார்.