முதன்முறையாக தமிழில் அனுராக் காஷ்யப் கதையின் நாயகனாக நடிக்கும் 'அன்கில் 123' | தீவிர மருத்துவ சிகிச்சையில் நடிகர் தர்மேந்திரா : உடல்நிலையில் முன்னேற்றம் என மகள் தகவல் | ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் |

இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜன் புருஸ்லீ என்கிற தோல்வி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதன் பிறகு பல போராட்டங்களுக்கு பிறகு 'விலங்கு' என்கிற வெப் தொடரை இயக்கினார். விமல், இனியா, முனீஷ்காந்த் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்தனர். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றது. இப்போது 'விலங்கு சீசன் 2' வெப் தொடரை இயக்கி வருகிறார்.
இதைத்தொடர்ந்து மீண்டும் ஒரு வெப் தொடர் ஒன்றை இயக்குகிறார் பிரசாந்த் பாண்டியராஜன். இந்த வெப் தொடரில் கதிர், திவ்யா பாரதி, பூர்ணிமா ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கேங்க்ஸ்டர் பின்னணியில் நடைபெறும் இந்த வெப் தொடருக்கு 'லிங்கம்' என தலைப்பு வைத்துள்ளனர்.




