ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
தமிழ் சினிமாவில் இன்றைய முக்கிய போட்டியாளர்கள் யார் என்று கேட்டால் விஜய், அஜித் என்றுதான் சொல்வார்கள். ரஜினி, கமல் சூப்பர் சீனியர்களாகி அவர்கள் வேறு ஒரு தளத்தில் சென்றுவிட்டார்கள். அதனால், விஜய், அஜித் ரசிகர்கள்தான் அதிகம் சண்டையிட்டுக் கொண்டும், போட்டி போட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். அதுவும் இரண்டு வருடம் வரை மட்டும்தான் நடக்கப் போகிறது. அதன்பின் விஜய் அரசியல் பக்கம் போய்விட்டால், அஜித்துக்கு இந்த போட்டி கூட இருக்குமா என்பது சந்தேகம்தான்.
கடந்த சில நாட்களாக விஜய், அஜித் சம்பந்தப்பட்ட சில அப்டேட்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்கிரமித்துள்ளது. 'கோட்' படப்பிடிப்பிற்காக விஜய் கேரளா சென்ற போது அங்கு அவருக்குக் கிடைத்த வரவேற்பு, அது சார்ந்த புகைப்படங்கள், வீடியோக்கள் என பரபரப்பு போய்க் கொண்டிருக்கிறது. மறுபக்கம் சக நண்பர்களுடன் பைக்கில் சுற்றுலா செல்லும் அஜித்தின் புகைப்படங்கள், அவரது வீடியோக்கள் என பில்டப் இல்லாத ஒரு பரபரப்பு ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த இரண்டையும் வைத்து விஜய், அஜித் ரசிகர்கள் பலவிதமான கமெண்ட்டுகளையும், பதிவுகளையும் செய்து வருகிறார்கள்.