மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை கதையில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். ‛இளையராஜா' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. கமல் முன்னின்று படத்தின் அறிமுக போஸ்டரை வெளியிட்டார். அருண் மாதேஸ்வரன் இயக்க, இளையராஜாவே இசையமைக்கிறார்.
படத்தின் அறிமுக விழாவில் பேசிய தனுஷ், ‛‛நம்மில் பல பேருக்கு இரவில் தூக்கம் வரவில்லை என்றால் இளையராஜாவின் இசை, பாட்டை கேட்டு தூங்குவோம். ஆனால் நான் பல இரவுகள் இளையராஜாவாக நடித்தால் எப்படி இருக்கும் என மனதில் நடித்து பார்த்து தூக்கம் இல்லாமல் இருந்துள்ளேன்.
நான் இரண்டு பேரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஆசைப்பட்டேன். ஒருவர் இளையராஜா, இன்னொருவர் ரஜினிகாந்த். ஒன்று நடந்துள்ளது. இது எனக்கு மிகப்பெரிய கர்வத்தை தருகிறது. நான் இளையராஜாவின் ரசிகன், பக்தன். அவரது இசை தான் எனக்கு துணை. இது எல்லோருக்கும் பொருந்தும். அதைத்தாண்டி அவரின் இசை எனக்கு நடிப்பு ஆசானும் கூட. நடிப்புன்னா என்னவென்று தெரியாத காலக்கட்டத்திலும் சரி, இப்பவும் சரி நான் நடிப்பதற்கு முன் இளையராஜாவின் இசை அந்தக்காட்சியில் எப்படி நடிக்கணும் என எனக்கு சொல்லிக் கொடுக்கும். அதை உள்வாங்கி நடிப்பேன்.
இந்த வேடத்தில் நடிப்பது பெரிய சவால் என எல்லோரும் சொல்றாங்க. ஆனால் எனக்கு அப்படி தெரியவில்லை. இப்பவும் அவரின் இசை எப்படி நடிக்கணும் என்று எனக்கு சொல்லும். இந்த நிகழ்ச்சிக்கு வரும்போது கூட இளையராஜா சார் நீங்க முன்னாடி போங்க, உங்க கைய பிடிச்சு நான் பின்னாடி வரேன் என்றேன். அதற்கு அவர் நான் என்ன உனக்கு கைடா என கேட்டார். நீங்க எனக்கு கைடு தான். நான் உங்களை பின்பற்றி தான் வந்து கொண்டு இருக்கிறேன்'' என்றார்.