அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
மலையாளத்தில் கடந்த மாதம் வெளியான சின்ன பட்ஜெட் படங்களாகட்டும், மம்முட்டி நடித்த பிரம்மயுகம் போன்ற பெரிய பட்ஜெட் படமாகட்டும் அனைத்துமே வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கின்றன. இதனை தொடர்ந்து அடுத்ததாக ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் ஆடுஜீவிதம்.
பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் மார்ச் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. இயக்குனர் பிளஸ்சி இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் மூலம் அவர் மீண்டும் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.
தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியிலும் சேர்த்து ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இடம்பெறும் 'நின்னே கிணாவும் காணும்' என்கிற பாடலை பாடகர் விஜய் யேசுதாஸுடன் இணைந்து பாடியுள்ளார் பின்னணிப் பாடகி சின்மயி. மலையாளத்தில் மட்டுமில்லாது வெளியாகும் ஐந்து மொழிகளிலும் சின்மயியே இந்த பாடலை பாடியுள்ளார்.
ஆனால் இந்த பாடல்கள் அனைத்துமே படம் துவங்கப்பட்ட சமயத்தில் அதாவது ஆறு வருடங்களுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டது என்கிற தகவலையும் கூறியுள்ள சின்மயி, இந்த படத்திற்காக முதன் முதலில் பதிவு செய்யப்பட்ட பாடல் இதுதான் என்றும், இந்த வாய்ப்பு கிடைப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன் என்றும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.