வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
நடிகர் விஜயகாந்த் செந்தூரப்பாண்டி படத்தின் மூலமாக நடிகர் விஜய்க்கும், பெரியண்ணா படம் மூலமாக நடிகர் சூர்யாவுக்கும் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் அறிமுகம் கிடைக்கும் விதமாக அந்த படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து உதவினார் என்பது பலருக்கும் தெரியும். இந்த இரண்டு படங்களையும் எஸ்.ஏ சந்திரசேகர் தான் இயக்கினார். இதில் பெரியண்ணா படத்தை தயாரித்தவர் விஜயகாந்த்திடம் கிட்டத்தட்ட 80 படங்களுக்கு மேல் உதவியாளராக பணியாற்றிய சுப்பையா என்பவர்தான். தன் உதவியாளரான சுப்பையாவை தயாரிப்பாளராக மாற்றும் விதமாக விஜயகாந்த் இந்த படத்தை நடித்துக் கொடுத்தார்.
அப்போது தனக்கு இருந்த நெருக்கமான பழக்கத்தில் இயக்குனராக எஸ்.ஏ சந்திரசேகரை ஒப்பந்தம் செய்த சுப்பையா, சூர்யா நடித்த கதாபாத்திரத்திற்கு முதலில் அஜித்தை தான் அணுகியுள்ளார். ஆனால் அப்போது முதுகில் அடிபட்டு அடிக்கடி வலியால் அவதிப்பட்டு வந்ததால் தனது நிலையை கூறி அந்த படத்தில் நடிக்காமல் ஒதுங்கிக் கொண்டார்.
அதன்பிறகு நடிகர் சத்யராஜ் மூலமாக தான் சூர்யா இந்த படத்திற்குள் கதாநாயகனாக வந்தார். அந்த நேரத்தில் திடீரென ஷோபா சந்திரசேகர் சுப்பையாவை அழைத்து தனது கணவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அதனால் இந்த படத்திற்கு வேறு ஒரு இயக்குனரை வைத்து இயக்கிக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார். ஆனால் பட பூஜை நடைபெற்று பூஜையன்றே படமும் விற்றுத்தீர்ந்த நிலையில் இதைக்கேட்டு அதிர்ச்சியான சுப்பையா, ஷோபாவிடம் எஸ்.ஏ.சி தான் இந்த படத்தை இயக்க வேண்டும் என கூறியுள்ளார்.
ஷோபா மீண்டும் பிடிவாதம் காட்டவே, எஸ்.ஏ.சியை படப்பிடிப்பில் தான் நன்றாக கவனித்துக் கொள்வதாகவும் குறைந்தபட்சம் விஜயகாந்த் நடிக்கும் நாட்களில் மட்டும் அவர் படப்பிடிப்பிற்கு வந்தால் போதும் என்றும் மற்ற நாட்களில் அவரது உதவியாளர்களை வைத்து படத்தை எடுத்துக் கொள்கிறேன் என்றும் கூலி ஷோபாவை சம்மதிக்க வைத்தாராம் சுப்பையா.
அதனால் சூர்யா நடித்த காட்சிகளை எஸ்.ஏ சந்திரசேகரன் இயக்கவே இல்லை என்றும் அவரது உதவியாளர்கள் தான் அவற்றை படமாக்கினார்கள் என்றும் ஒரு புதிய தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் தயாரிப்பாளர் சுப்பையா. இந்த தகவல் சூர்யா ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.