‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் | வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் |
இந்தியத் திரையுலகத்தின் சாதனையாளர்களுக்கு இந்திய அரசு சார்பில் வழங்கப்படும் உயரிய விருது 'தாதா சாகேப் பால்கே விருது'. 1969 முதல் இந்த விருது வழஙகப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவுடன் தொடர்பு கொண்டவர்களில் “எல்வி பிரசாத், பி நாகிரெட்டி, நாகேஸ்வரராவ், சிவாஜிகணேசன், டி ராமாநாயுடு, கே பாலசந்தர், கே விஸ்வநாத், ரஜினிகாந்த்,” ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் எக்ஸ் தளத்தில், “பின் வருபவர்கள் எப்போதோ தாதா சாகேப் பால்கே விருதுகளை வாங்கியிருக்க வேண்டும் என்பது எனது கருத்து. பி. சுசீலா, எஸ் ஜானகி, எஸ்பி பாலசுப்பிரமணியம், கேஜே யேசுதாஸ், இளையராஜா, ஏஆர் ரஹ்மான்…அவர்களில் சிலர்,” என்று குறிப்பிட்டுள்ளார்.