மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சண்டுக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், அவர்களது திருமணம் வருகிற ஜூலை மாதம் நடக்க உள்ளது. இந்த நிலையில் அவர்களது ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் மார்ச் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டு, இந்தியா மற்றும் உலக அளவில் உள்ள பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில், பாலிவுட் சினிமாவை சேர்ந்த ஷாருக்கான், அமீர்கான், சல்மான் கான், ரன்வீர் சிங், அக்ஷய்குமார் உள்ளிட்ட பலர் குடும்பத்துடன் பங்கேற்ற நிலையில், தமிழ் சினிமாவில் இருந்து ரஜினிகாந்த் தனது மனைவி, மகள் ஐஸ்வர்யா ஆகியோருடன் கலந்து கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.