சிவாஜிகணேசன் - சரோஜா தேவி இணைந்த நடித்த படங்கள் | எம்ஜிஆர் - சரோஜா தேவி இணைந்து நடித்த 26 படங்கள் | சூப்பர் குட் பிலிம்ஸ் 99வது தயாரிப்பில் விஷால் | 'தாமரை நெஞ்சம்' ஒரு படம் போதுமே: பாலசந்தர் அளித்த பதில் | தமிழில் தனது கடைசி படத்தில் நடித்த சரோஜா தேவி | ‛வெள்ளி விழா' படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள் | தனது உயிர் சென்னையில் பிரிய வேண்டும் என்று பேசியிருந்த சரோஜா தேவி | புதிய போட்டி வந்தாலும், சம்பளத்தை உயர்த்திய அனிருத் | தங்கள் தனிப்பட்ட சண்டையை மேடையில் பேசிய விஜய் சேதுபதி, பாண்டிராஜ் | ரவுடி சோடா பாபுவாக மாறிய அல்போன்ஸ் புத்திரன் |
மோகன்லால் நடிப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் திரிஷ்யம். முதன்முதலாக மலையாளத்தில் 50 கோடி வசூலித்த படம் என்கிற சாதனையை இந்த படம் செய்தது. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மட்டுமல்லாது சீன மொழியிலும் இந்த படம் ரீமேக் செய்து வெளியிடப்பட்டது. மேலும் சில வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை திரிஷ்யம் 2 என்கிற பெயரில் இயக்கி முதல் பாகத்தைப் போலவே மிகப்பெரிய வெற்றி படமாக்கினார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.
இந்த இரண்டாம் பாகம் ஹிந்தியில் மட்டுமே ரீமேக் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. இந்த படத்தின் இரண்டு பாகங்களையும் 10 மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை ஹாலிவுட்டில் உள்ள பிரபல தயாரிப்பு நிறுவனமான பனோரமா ஸ்டுடியோஸ் கைப்பற்றியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இன்று வெளியிட்டுள்ளது.
முதலில் தென்கொரியா மற்றும் ஆங்கில மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்படும் என்றும் அதற்கு அடுத்ததாக ஸ்பானிஷ் மொழி உள்ளிட்ட மொத்தம் பத்து மொழிகளில் வரும் மூன்றில் இருந்து ஐந்து வருடங்களுக்குள் இந்த படம் அடுத்தடுத்து ரீமேக் செய்யப்பட இருக்கிறது என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். இந்தியாவிலிருந்து இப்படி இத்தனை மொழிகளில் ரீமேக் ஆகும் முதல் படம் என்கிற பெயரை திரிஷ்யம் தட்டிச் செல்கிறது.