'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
தொலைக்காட்சி தொகுப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரியோ. அதன்பின் சின்னத்திரை சீரியல்களில் பயணித்து பின்னர் வெள்ளித்திரையிலும் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த 'ஜோ' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவரை தேடி நிறைய புதிய கதைகள் வருகின்றன.
தற்போது ஜோ படத்தை தயாரித்த நிறுவனத்தில் மீண்டும் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஜோ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் இயக்குகிறார் என கூறப்படுகிறது. இதையடுத்து திட்டம் இரண்டு, அடியே ஆகிய படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ரியோ ஹீரோவாக நடிக்கவுள்ளார்.
இது அல்லாமல் தெலுங்கு, தமிழ் மொழியில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகும் ஒரு புதிய படத்தில் இரண்டாம் கதாநாயகன் வேடத்தில் ரியோ நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஜோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரியோ அடுத்த அடுத்த படங்களை கவனமாக தேர்ந்தெடுக்கின்றார்.