‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் | வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் |
பாலிவுட் சினிமாவில் சரித்திர படங்களுக்கென்று மினிமம் கியாரண்டி இருப்பது தான் இப்போதைய டிரண்டிங். மாமன்னர் பிருத்விராஜ், ஜான்சி ராணி, அக்பர் உள்ளிட்ட பலரின் சரித்திர கதைகள் சினிமா ஆகின.
அந்த வரிசையில் தற்போது மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையும் சினிமா ஆகிறது. இதில் சிவாஜி கதாபாத்திரத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் நடிக்கிறார். இவரே படத்தை இயக்கவும் செய்கிறார். அவரது மனைவியும், நடிகையுமான ஜெனிலியா தயாரிக்கிறார்.
இதுகுறித்து ரித்தேஷ் தேஷ்முக் கூறும்போது, ''இந்திய சரித்திரத்தில் மகத்தான இடத்தை பிடித்துள்ள மராட்டிய மன்னர் சிவாஜியாக நடிப்பதில் பெருமை அடைகிறேன். இந்த படத்தை நானே டைரக்டும் செய்கிறேன். சத்ரபதி சிவாஜி என்ற பெயரே ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம் ஆகும். இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் அவரது பெயரை கேட்டாலே எமோஷனல் ஆவார்கள்.
இந்திய மண்ணில் பிறந்த மாணிக்கம் அவர். அவரது வாழ்க்கை எதிர்கால தலைமுறைக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். அப்படிப்பட்டவரின் வாழ்க்கையை சினிமா படமாக எடுப்பதை பெருமையான விஷயமாக நினைக்கிறேன். எங்களின் இந்த புதிய முயற்சிக்கு அனைவரின் ஆசியும் வேண்டும்'' என்றார்.