சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு |

சந்தானம் நடித்து கடந்த 2ம் தேதி திரைக்கு வந்த படம் ‛வடக்குப்பட்டி ராமசாமி'. இப்படத்தின் டிரைலர் வெளியானபோது, ‛கடவுளே இல்லை என்று சொல்லிக்கொண்டு திரிந்தானே அந்த ராமசாமியா நீ' என்று படத்தில் இடம்பெற்ற டயலாக் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுவே இப்படத்துக்கு பெரிய விளம்பரமாகவும் அமைந்து வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் நேற்று இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அப்போது இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பு எழுந்த ஈ.வே.ரா சர்ச்சை குறித்து சந்தானம் கூறுகையில், இப்படத்தில் ஈ.வே.ரா.,வின் பெயரை எந்த இடத்திலும் நாங்கள் குறிப்பிடவில்லை. வடக்குப்பட்டி ராமசாமி என்பது கவுண்டமணியின் டயலாக். அதைத்தான் இயக்குனர் இப்படத்திற்கு டைட்டிலாக வைத்திருக்கிறார். குறிப்பாக, கடவுளை வைத்து காசு பண்றது தப்பு. அதே கடவுள் நம்பிக்கையை வைத்து அரசியல் பண்றதும், பிரச்னை பண்றதும் தப்பு என்று தான் இந்த படத்தில் கூறி இருக்கிறோம் என்று ஒரு விளக்கம் கொடுத்தார்.
மேலும் இந்த படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்தே சோசியல் மீடியாவில், சந்தானம் சங்கி என்று விமர்சிக்கப்பட்டு வருகிறதே என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் ஆறாவது படித்து வந்த போது சங்கீதா என்ற ஒரு பெண்ணை காதலித்தேன். அப்போது அவரை சங்கி சங்கி என்று தான் அழைப்பேன். அதனால் அவர் சங்கி ஆகி விடுவாரா என்று அந்த கேள்விக்கு ஒரு நறுக் பதில் கொடுத்தார் சந்தானம்.