‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? |
விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கி உள்ள படம் தங்கலான். இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரது நடிப்பில் தான் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்தபடியாக இயக்கப் போகிறார் ரஞ்சித். பாக்சிங் விளையாட்டை மையமாக கொண்ட கதையில் உருவான இப்படத்தின் இரண்டாம் பாகம் 90 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராக உள்ளது. தங்கலான் படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வந்ததும் இந்த சார்பட்டா- 2 படத்தின் பணிகளை துவங்குகிறார் ரஞ்சித். மேலும், சார்பட்டா பரம்பரை படம் ஓடிடியில் வெளியான நிலையில், சார்பட்டா 2 படம் கண்டிப்பாக தியேட்டரில் தான் வெளியாக உள்ளதாம்.