போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா. தெலுங்கு திரை உலகையும் தாண்டி தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும், பாலிவுட்டிலும் கூட மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. ராஷ்மிகா மந்தனா மற்றும் சமந்தா இருவரும் இந்த படத்தில் ஆடிய நடனமும், பாடலும் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆட்டம் போட வைத்தது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் விதமாக உருவாகி வருகிறது. தமிழகத்தில் புஷ்பா திரைப்படம் இந்த அளவிற்கு மிகப்பெரிய வெற்றியடைய இயக்குனர் எழிலும் ஒரு காரணம் என தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு புதிய தகவலை கண்டுபிடித்து கூறியுள்ளார்.
துள்ளாத மனமும் துள்ளும் படம் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அடியெடுத்து வைத்த எழில் தனது திரையுலக பயணத்தில் 25வது வருடத்தை எட்டியுள்ளார். தற்போது அவர் இயக்கி வரும் தேசிங்கு ராஜா-2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு அவரது 25வது வருட விழாவும் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், “இப்போது பெரிய அளவில் உள்ள விஜய், அஜித், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு அவர் வெற்றி படங்களை கொடுத்துள்ளார் எழில். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் விஷ்ணு விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். அந்த படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் காமெடி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்றால் அதற்கு இயக்குனர் எழிலும் ஒரு காரணம்தான்” என்றார்.