சகலகலா வல்லவன் ‛ஹேப்பி நியூர்' பாடலை படமாக்கிய ஒளிப்பதிவாளர் பாபு காலமானார் | டிச., 25ல் சிறை ரிலீஸ் : உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட விக்ரம் பிரபு படம் | இமயமலை பயணத்தை நிறைவு செய்த ரஜனிகாந்த் | விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் | 2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் |
சமீபகாலமாக தமிழ், தெலுங்கு என எந்த மொழியாக இருந்தாலும் அங்குள்ள முன்னணி ஹீரோக்களின் போஸ்டர்களில் எல்லாமே அவர்கள் புகை பிடிப்பது போன்ற காட்சி தான் தவறாமல் இடம் பெறுகிறது. இதுகுறித்த கடுமையான விமர்சனங்களையும் அவர்கள் சந்தித்து வருகிறார்கள். மேலும் படத்திலும் அவர்கள் சிகரெட் குடிக்கும் காட்சிகள் இடம் பெறுகின்றன.
சமீபத்தில் தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் படத்தின் போஸ்டர்களில் எல்லாம் பெரும்பாலும் அவர் புகை பிடிப்பது போன்று தான் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் நிஜமாகவே தனக்கு புகை பிடிக்கும் பழக்கம் இல்லை என்றும் புகை பிடிப்பதை எப்போதும் ஊக்கப்படுத்த மாட்டேன் என்றும் கூறியுள்ளார் மகேஷ்பாபு.
இதுகுறித்து மகேஷ்பாபு கூறும்போது, “இந்த படத்தில் முதல் நாள் நிஜமான பீடி பிடித்தபோது அதனால் ஏற்பட்ட தலைவலியை என்னால் தாங்க முடியவில்லை. அதற்கு பிறகு இதுபற்றி இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸிடம் கூறியபோது, இந்த ஆயுர்வேத பீடியை உபயோகிக்க முடிவு செய்தோம். இதை புகைத்தபோது மனதிற்கு மட்டுமல்ல மூளைக்குமே நல்ல சுறுசுறுப்பு ஏற்பட்டது. அதன் புகையால் ஏற்பட்ட நறுமணம் கூட இனிமையாக இருந்தது” என்று கூறியுள்ளார்.