மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் மற்றும் பலர் நடிப்பில் தெலுங்கில் மட்டுமல்லாது பான் இந்தியா படமாக மற்ற மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியான படம் 'ஹனு மான்'.
இப்படம் நான்கு நாட்களில் உலக அளவில் 100 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “குறைந்த தியேட்டர்களிலும், குறைவான டிக்கெட் கட்டணங்களில்,” இந்தத் தொகைப் பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த 'குண்டூர் காரம்' படத்திற்கு அதிக தியேட்டர்கள் கொடுக்கப்பட்டதாகவும், அதனால், இப்படத்திற்கு குறைவான தியேட்டர்களையே ஒதுக்கினார்கள் என்பது வெளியீட்டிற்கு முன்பாகவே சர்ச்சையைக் கிளப்பியது.
படம் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது குறித்து படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். படத்தின் இயக்குனர் பிரசாந்த் வர்மா, “எனது திரைப்படங்களில் முதல் செஞ்சுரி,” என்றும் படத்தின் நாயகன் தேஜா சஜ்ஜா, “எனது 'ஜெர்ஸி' தருணம்... தற்செயலாக இப்படத்திலும் எனது போஸ் அப்படியே இருக்கிறது,” என்றும் படத்தின் நாயகி அம்ரிதா ஐயர், “ஜெய் ஸ்ரீராம். எனது மகிழ்ச்சி கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை,” என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இப்படம் 200 கோடி வசூலைக் கடக்க வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.