இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
தனுஷின் கேப்டன் மில்லர் படம் ரிலீஸாகி உள்ளது. அடுத்து அவரது நடிப்பில் தனுஷின் 50வது படம் வெளியாக உள்ளது. இதை தனுஷ் இயக்கி, நடித்துள்ளார். தனுஷ் தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனது 51வது படத்தில் நடிக்கவுள்ளார். இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் நாகார்ஜூனா நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இதன் படப்பிடிப்பு வருகின்ற ஜனவரி 24ம் தேதி அன்று தொடங்குகிறது என தகவல் வெளியாகியுள்ளது. கூடுதலாக, இதன் படப்பிடிப்பு மும்பை, கொச்சி ஆகிய பகுதிகளில் முதற்கட்டமாக நடைபெறும் என்கிறார்கள்.