லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தமிழில் சுதா கொங்கரா, மதுமிதா, புஷ்கர் காயத்ரி, ஐஸ்வர்யா ரஜினி என பெண் இயக்குனர்கள் சிலர் பிசியாக இருக்கிறார்கள். ஏராளமான பெண் இயக்குனர்கள் அறிமுகமானலும் ஓரிரு படங்களோடு அவர்கள் விலகி விடுகிறார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டு அறிமுகமாகிறார் நிவேதா சந்தோஷ்.
'வருவேன் உனக்காக' என்ற படத்தை இயக்கி உள்ளார். இதனை அனு சினிமா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் கதாநாயகனாக தனசேகர் , கதாநாயகியாக ஜெயந்தி நடித்துள்ளார். விக்னேஷ் இசையமைத்துள்ளார்.
படம் பற்றி நிவேதா சந்தோஷ் கூறும்போது "என்னோட பட குழுவினர் அனைவரும் இந்த படத்துக்கு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க இந்த படத்தை நாங்க கஷ்டப்பட்டு தான் தொடங்கினோம். எல்லாரும் கிண்டல் பண்ணாங்க அதையும் தாண்டி இப்போ இந்த படத்தை டிரைலர் வர கொண்டு வந்திருக்கோம். இதுவே எனக்கு வெற்றி தான் திரையரங்கில் மிக விரைவில் இந்த படம் வரும். இது ஒரு கமர்சியல் படம்தான் வல்கரா எந்த ஒரு சீனும் எடுத்ததில்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கலாம்" என்றார்.