பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
நயன்தாரா சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. சின்னத்திரை தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கிய நயன்தாரா 'மனசினக்கரே' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 'ஐயா' படத்தின் மூலமாக தமிழுக்கு வந்தார். தற்போது 20 ஆண்டுகளில் 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையான நயன்தாரா இந்த ஆண்டு பாலிவுட்டிலும் அறிமுகமாகி உள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.
சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பகத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "நான் 20 ஆண்டுகளை கடந்தும் இங்கே நிற்பதற்கு ரசிகர்களாகிய நீங்கள்தான் காரணம். எனக்கு உந்து சக்தியாகவும், இதய துடிப்பாகவும் இருந்தீர்கள். நீங்கள் இல்லாமல் சினிமா வாழ்க்கை பயணம் முழுமையடையாது. 20 ஆண்டு மைல் கல்லை எட்டுவதற்கு எனது பயணத்தை வடிவமைத்து ஊக்கமளிக்கும் சக்தியாக நீங்கள் இருந்ததை கொண்டாடுகிறேன்.
எனது ஒவ்வொரு திட்டத்தையும் வெற்றியாக மாற்றிய மந்திரம் நீங்கள்தான். இந்த மைல்கல்லை நான் கொண்டாடும் போது, இந்த இரண்டு தசாப்தங்களாக சினிமாவில் உருவான நம்பமுடியாத, ஆதரவான மற்றும் ஊக்கமளிக்கும் சக்தியை நான் கொண்டாடுகிறேன். எப்போதும் உங்கள் அன்பு எனக்கு வேண்டும்” என்று எழுதியிருக்கிறார்.