ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா தொடர்ந்து 20 வருடங்களுக்கு மேலாக ஹீரோயினாக நடித்து வருகிறார். இடையில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு பிறகு மீண்டும் பிசியாகி விட்டார். சமீபத்தில் விஜய்யுடன் 'லியோ' படத்தில் நடித்திருந்தார். தற்போது அஜித்துடன் 'விடா முயற்சி' படத்தில் நடித்து வருகிறார்.
பாலிவுட் பட வாய்ப்புகள் பலமுறை வந்தும் நடிக்க மறுத்து வந்த த்ரிஷா தன்னை அறிமுகப்படுத்திய பிரியதர்ஷன் இயக்கிய 'கட்டா மேத்தா' என்ற படத்தில் நடித்தார். இதில் அவர் அக்ஷய்குமார் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் 2010ம் ஆண்டு வெளியானது. அதன்பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனாலும் அவர் நடித்த பொன்னியின் செல்வன், லியோ படங்கள் ஹிந்தியில் வெளியானது.
தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் நடிக்கிறார். தமிழ் இயக்குனர் விஷ்ணுவர்த்தன் சல்மான்கான் நடிக்க இருக்கும் படத்தை இயக்குகிறார். இதில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.
தமிழில் அறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம், ஆரம்பம், யட்சன் உள்ளிட்ட படங்களை இயக்கிய விஷ்ணுவர்த்தன் ஹிந்தியில் 'ஷெர்ஷா' என்ற படத்தை இயக்கினார். கார்கில் போரை மையமாக கொண்டு உருவான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவர் சல்மான்கான் நடிக்கும் படத்தை இயக்குகிறார். பிரமாண்ட ஆக்ஷன் படமாக உருவாகி 2025ம் ஆண்டு வெளியாக இருக்கிறது.