பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் ஏ.எல்.விஜய். மதராசப்பட்டினம், தெய்வதிருமகள், தலைவா, தலைவி உள்ளிட்ட பல முக்கிய படங்களை இயக்கி உள்ளார். தற்போது அவர் இயக்கி உள்ள 'மிஷன் சேப்டர் 1' என்ற படம் பொங்கலை முன்னிட்டு வெளிவருகிறது. இதற்கான பணியில் அவர் மும்முரமாக இருக்கிறார்.
விஜய், சென்னை தேனாம்பேட்டை அபிபுல்லா சாலையில் வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை படத்தின் பணிகளை கவனிக்க உதவியாளர் மணிசர்மாவுடன், விஜய் சென்றார். காரை கவுதம் என்பவர் ஓட்டினார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், விஜய்யின் காரை உரசி சென்றதாக கூறப்படுகுிறது. இதனால் விஜய் அவரை நோக்கி சத்தம் போட்டார். இதையடுத்து அந்த நபர், வேகமாக வந்து காரை வழிமறித்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றவே, அந்த நபர் தனது ஹெல்மெட்டை வைத்து விஜய்யை தாக்க முயன்றார்.
இதில் விஜய் விலகவே, அருகில் இருந்த மணிசர்மா தலையை ஹெல்மெட் தாக்கியது. இதில் அவர் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. தாக்குதலில் ஈடுபட்ட அந்த நபர், அங்கிருந்து சென்றுவிட்டார். மணிசர்மா அருகில் இருந்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இதுகுறித்து மணிசர்மா அளித்த புகாரின்பேரில், தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோட்டார் சைக்கிளில் வந்தவர் அதே பகுதியை சேர்ந்த ஐசக் என்பது தெரியவந்துள்ளது. அவர் சினிமா நிகழ்ச்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு பவுன்சராக பணியாற்றியவர் என்பதும் தெரியவந்துள்ளது.