வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் |
உலக புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் வின் டீசல். ‛பாஸ்ட் அண்ட் பியூரியஸ்' படங்களின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றவர். அவர் மீது தற்போது அவரது முன்னாள் உதவியாளர் ஜோனாசன் பாலியல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் “கடந்த 2010ம் ஆண்டு 'பாஸ்ட் பைவ்' படத்தில் நடிகர் வின் டீசலுடன் அவரது உதவியாளராக பணியாற்றினேன். 'பாஸ்ட் பைவ்' படப்பிடிப்பின் போது அட்லாண்டாவுக்குச் சென்றோம். ஓட்டலில் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தோம். ஒரு நாள், நடிகர் வின் டீசல் திடீரென எனது அறைக்குள் வந்து என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவே தனது வெறுப்பை காட்டிச் சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்திலேயே நான் வேலையில் இருந்து நீக்கப்பட்டேன். என்று தனது புகார் மனுவில் தெரிவித்திருக்கிறார்.
இதனை வின் டீசல் மறுத்திருக்கிறார். என்னிடம் ஜோனோசன் பணியாற்றியயோது அவரை கன்னியமாக நடத்தினேன். பல ஆண்டுகளுக்கு பிறகு அவர் புகார் கூறுவதன் பின்னணியில் எனது எதிரிகள் இருப்பதாக கருதுகிறேன். வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.