லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கே.பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த லிவிங்ஸ்டன் அவர் இயக்கிய 'டார்லிங் டார்லிங்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். ஹீரோ, குணசித்திரம் மற்றும் காமெடி வேடங்களில் 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். என் புருஷன் குழந்தை மாதிரி, எங்களுக்கும் காலம் வரும் உள்ளிட்ட சில படங்களில் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.
கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த லிவிங்ஸ்டன் தற்போது இந்து மதத்திற்கு மாறி இருக்கிறார். பல மாதங்களுக்கு முன்பே அவர் மாறிவிட்டிருந்தாலும் அதனை இப்போதுதான் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் “இத்தனை ஆண்டுகள் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றினேன். எனக்கு இந்த மதம் தற்போது அயர்ச்சியைக் கொடுத்துள்ளது. அதனால், நான் இந்து மதத்திற்கு மாறியுள்ளேன். எனக்கு கடவுள் கிருஷ்ணரைப் பிடிக்கும். அதனால், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா அமைப்பில் இணைந்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.