'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
நடிகர் விக்ரம் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். ஆனால் ஆரம்ப கால கட்டத்தில் அவர் நடித்த பல படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தது. 1999 காலகட்டத்தில் புதுமுக இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம் 'சேது' படத்தில் நடித்தார். இளையராஜா இசையில் படம் வெளியாகுவதற்கு முன்பே பாடல்கள் ஹிட் ஆனது.
ஆனாலும், இந்த படத்தை வாங்குவதற்கு எந்த விநியோகஸ்தர்களும் முன்வரவில்லை. அப்போது இந்த படத்தின் பிரிவியு காட்சிகள் மட்டுமே 90 காட்சிகள் நடந்ததாக சினிமா வட்டாரங்களில் தெரிவித்தனர். பல போராட்டங்களுக்கு பிறகு வெளிவந்த இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. அந்த சமயத்தில் சிறந்த படத்திற்கான தேசிய விருது சேது படத்திற்கு கிடைத்தது. இந்த படத்திற்கு பிறகு தான் விக்ரம், பாலா இருவரும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நட்சத்திரங்களாக மாறினர்.
இந்த படம் வெளியாகி நேற்றோடு 24 ஆண்டுகள் ஆன நிலையில் இதனை கொண்டாடும் விதமாக விக்ரம் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சேது" என பதிவிட்டுள்ளார்.