சென்னை: மழை நிவாரண பணிகளில் ஈடுபட விஜய் மக்கள் இயக்கத்திற்கு நடிகர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழையால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் உணவு இன்றி தவிப்பதாக செய்திகள் வருகின்றன.
உதவிகேட்டு இன்னமும்நிறைய குரல்கள் சமூக வலை தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன. அரசின் மீட்பு நடவடிக்கை பணிகளில் மக்கள் இயக்க நிர்வாகிகள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். தன்னார்வலர்களாக இயன்ற உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு நடிகர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.