ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து கடந்த வருடம் வெளிவந்த கன்னடப் படம் 'கேஜிஎப் 2'. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டை கடந்த வருடம் மார்ச் மாதம் பெங்களூருவில் விமரிசையாக நடத்தினார்கள். தென்னிந்திய அளவில் உள்ள பத்திரிகையாளர்கள், மும்பை பத்திரிகையாளர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி அவர்கள் முன் டிரைலர் வெளியீடு நடைபெற்றது. பான் இந்தியா படமாக ஏப்ரல் மாதம் வெளியான படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்தது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன் நடித்து இந்த மாதம் வெளியாக உள்ள 'சலார்' படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது. ஆனால், இந்தப் படத்திற்காக எந்த ஒரு விழாவையும் தயாரிப்பு நிறுவனம் நடத்தவில்லை. 'கேஜிஎப் 2' படத்திற்காக அப்படி ஒரு விழாவைக் கொண்டாடிய குழுவினர் இந்த 'சலார்' படத்தின் டிரைலர் வெளியீட்டை நேரடியாக யு டியூப் தளத்தில் வெளியிடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் படம் வெளியாவதற்கு முன்பாக படக்குழுவினர் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து படத்தை புரமோஷன் செய்வார்கள் எனத் தெரிகிறது.