நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சுந்தர்.சி இயக்கிய 'காபி வித் காதல்' படத்தில் நடித்தவர் மாளவிகா சர்மா. அதற்கு முன்பு நீல டிக்கெட், ரெட் என்ற தெலுங்கு படங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் தெலுங்கில் தயாராகி வரும் 'ஹரோம் ஹரா' என்ற பான் இந்தியா படத்தில் சுதீர் பாபு ஜோடியாக நடித்துள்ளார்.
ஸ்ரீ சுப்ரமண்யேஷ்வரா சினிமாஸ் சார்பில் சுமந்த் ஜி.நாயுடு தயாரித்திருக்கிறார். சுனில், ஜெ.பி, அக்ஷரா கவுடா, லக்கி லக்ஷமன், ரவி காளே மற்றும் அர்ஜூன் கவுடா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். சைத்தன் பரத்வாஜ் இசை அமைத்துள்ளார். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அடுத்த ஆண்டு துவக்கத்தில் படம் தெலுங்கு, தமிழ், கன்னடா, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட இருக்கிறது. ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது. தற்போது இதன் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.