வளர்ந்து வரும் நடிகர் சங்கக் கட்டுமானம்: வீடியோ வெளியீடு | 'காந்தாரா' ஷூட்டிங்கில் மீண்டும் விபத்து | 'வட சென்னை' முன்பகுதி கதையில் வெற்றிமாறன் - சிலம்பரசன் கூட்டணி? | ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே படப்பிடிப்பு நிறைவு | மார்கோ 2 கைவிடப்பட்டது : உன்னி முகுந்தன் | வாழைப்பழக் கடை நடத்தியவரின் மகன் இன்று பிரபாஸ் பட இயக்குனர் | பவன் கல்யாண் நடிக்கும் படத்தை இயக்க தனுஷ் விருப்பம் | பிளாஷ்பேக்: சிவாஜியின் வசனம், டி எம் எஸ் பேசிப் பாடி, சிறப்பித்த திரைப்படப் பாடல் | குபேரா : தமிழ் டிரைலரை ஓவர்டேக் செய்யும் தெலுங்கு டிரைலர் | லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு |
2020ம் ஆண்டு நடந்த 'குளோபல் மிஸ்.இந்தியா' போட்டியில் அழகி பட்டம் வென்றவர் பாஷினி பாத்திமா. சென்னையை சேர்ந்த இவர் நடிகர் ஜே.எம்.பஷீரின் மகள் ஆவார். சென்னையில் பள்ளி, கல்லூரில் படிப்பை முடித்தவர், லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் நிர்வாக மேலாண்மை படித்தார்.
தற்போது அழகி பட்டம் வென்ற நிலையில் சினிமாவில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். இதற்காக அவர் கூத்துப்பட்டறையில் இணைந்து நடிப்பு கற்று வருகிறார். நடிகை கலைராணி அவருக்கு நடிப்பு பயிற்சி அளிக்கிறார். விரைவில் அவர் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது.