பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் |

'கவிதை பாடும் அலைகள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஈஸ்வரி ராவ். விஜய்யின் 'நாளைய தீர்ப்பு' படத்தில் நடித்தார். அதன் பிறகு பல படங்களில் நடித்த அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு 'காலா' படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தார். தொடர்ந்து 'அழியாத கோலங்கள்' இரண்டாம் பாகத்தில் நடித்தார். தற்போது அவர் கதையின் நாயகியாக நடித்துள்ள தமிழ் படம் 'ஆலகாலம்'.
ஸ்ரீஜெய் புரொடக்ஷன் தயாரிப்பில், ஜெயகி இயக்கத்தில் உருவாகி உள்ளது. ஜெயகி, சாந்தினி நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். தீபா, தங்கதுரை, சிசர் மனோகர், கோதண்டம் உள்பட பலர் நடித்துள்ளனர். சத்யராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ஜெயகி கூறும்போது “சமூகத்தின் மிகப்பெரும் பிரச்சனைகளையும், உண்மைச் சம்பவங்களையும் மையப்படுத்தி, மிகவும் எதார்த்தமாக உருவாகியுள்ளது. ஒரு தாயின் கனவை நனவாக்க முயலும் இளைஞனின் வாழ்க்கை சமூகத்தால் சீரழிய அவனை மீட்க, அவனது தாயும் காதலியும் போராடுகிறார்கள். அந்த இளைஞன் மீண்டானா? வாழ்வில் ஜெயித்தானா? தாயின் கனவு நிறைவேறியதா என்பதே படம். அந்த தாயாக முதன்மை கேரக்டரில் ஈஸ்வரிராவ் நடித்துள்ளார்” என்றார்.