சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா | மம்முட்டி பட இயக்குனருக்கு வெற்றியை தருவாரா சவுபின் சாஹிர் ? | 10 நாள் அவகாசத்துடன் மீண்டும் ஆரம்பமான கன்னட பிக்பாஸ் 12 | விஜய்க்கு பவன் கல்யாண் ஆலோசனை சொன்னாரா? |
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்துள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படம் டிச.,15ல் வெளியாகும் என முதலில் அறிவித்து, பின்னர் பொங்கல் பண்டிகைக்கு வெளியிடுவதாக அறிவித்தனர்.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறவுள்ள 'வறண்ட மண்ணும் குருதி குடிக்கும்..புழுவுக்கெல்லாம் விருந்து படைக்கும்.. நாந்தான்டா நீதி.. நாந்தான்டா நீதி' என்ற பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.